மழை
பூமிபூவில் தேனை ஊற்றும்
அதிசய வண்டு
-கார்மேகம்.
பூமிபூவினை சுற்றி வரும்
கார்மேக வண்டின்
ரீங்காரம்
-மழையின் ஒசை.
கார்மேக வண்டின் வருகையால்
பூமிபூ மனம் வீசுகிறதா?
பூமிபூ மனம் வீசுவதால்
கார்மேக வண்டின் வருகிறதா?

கார்மேக வண்டின் இரக்கை
மினுமினுப்பானவை
அதன் மினுமினுப்பு சற்றென
தோன்றி மறையும்
தன்மை கொண்டவை
-மின்னல்.

கார்மேக வித்வானின்
மத்தளச் சத்தம்
-இடி.
கார்மேக மங்கையின்
ஜதி பாட்டு
-மழை மண்ணில்
விழும் ஒசை.


Advertisements