நாடோடி

நாடோடி

முடிவிலா பயணம் செல்ல
தொலைதூர குறிக்கோள் கொண்டு
சேரும் இடமறியாமல்

துணிந்தே புறப்பட-
பாதைகள் பலவாகும்
நேரம் மிகக்குறைவாகும்

இதையறியாமல்-
சொல்வதை கேளாத மனம் அதனில்
ஓயாத எண்ணங்கள் பல கொண்டு
அன்பெனும் ஆயுதம் அதை கொண்டு
அழிவில்லாத தூய ஆத்மா அதனைத்
தேடி பயணமது தொடர்ந்தது.

Advertisements