நிறங்கள்

புத்தம் புது காலையில்..
வெண்பால் மனத்தோடு
நீல வானில்
செஞ்சூரியனை காண
இளஞ்சிவப்பு பாதம் தரை வைத்து
மஞ்சள் காட்டு வழி
பசும்புல் பாதையில் நடந்து
பழுப்பு மணல் பரப்பை அடைந்து
தலை நிமிர்ந்து வானைக் கண்டேன்..

அப்போது தான் உறைத்தது..
அது..
காலை சூரியனை கண்டு களிக்கும் காலமன்று
மாலை நிலவை கண்டு ரசிக்கும் காலமென்று.

கருவானில் ஒளிரும்
வெள்ளி நிலவை கண்டு
உள்ளம் குளிர ரசிக்கலானேன்.

Advertisements