ஜன்னல் வழி உலகம்

ஜன்னல் வழியே..
பயணமானது-
என் மனம்.

சாலையில் செல்லும்
ஒவ்வொருவரையும்
ஆராய்ந்தது.

தோட்டத்தில் பூத்த
பூக்களை எண்ணத்
தொடங்கியது.

வானின் வருகை
பதிவேட்டில் நிலவைத்
தேடியது.

மீண்டும் அடைப்பட்டு
விட்டதோ?

என் மனம் – வீட்டு சிறைக்குள்.

உலகம் தன்னை காண சென்றேன் –
ஜன்னலின் வழியல்ல –
வாழ்க்கையின் வழி.

Advertisements