தமிழா.. தமிழா..

தமிழா.. தமிழா..
நாளை நம் நாளே!
தமிழா.. தமிழா..
நாடும் நம் நாடே!

என் வீடு தாய்த் தமிழ்நாடு என்றே சொல்லடா.
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா.

இனம் மாறலாம்..
குனம் ஒன்றுதான்.
இடம் மாறலாம்..
நிலம் ஒன்றுதான்.
மொழி மாறலாம்..
பொருள் ஒன்றுதான்.
தடி மாறலாம்..
கொடி ஒன்றுதான்.
திசை மாறலாம்..
நிலம் ஒன்றுதான்.
இசை மாறலாம்..
மொழி ஒன்றுதான்.

நம் இந்தியா…
அது ஒன்றுதான், இறைவா!!

தமிழா.. தமிழா..
கண்கள் கலங்காதே!
விடியும்.. விடியும்..
உள்ளம் மயங்காதே!

உனக்குள்ளே இந்திய ரத்தம்..
உண்டா? இல்லையா?
ஒன்றான பாரதம் உன்னை
காக்கும் இல்லையா?

நவபாரதம் பொதுவானது.
இது வேர்வையால் உருவானது.

இம்மண்ணிலா?
பிரிவென்பது, இறைவா!!

Advertisements