ஓ வெண்ணிலா..

ஓ வெண்ணிலா..
இரு வானிலா?
நீ?
ஓ நண்பனே…
அறியாமலா?
நான்?

கண்ணே கண்ணே காதல் செய்தாய்.
காதல் என்னும் பூவை நெய்தாய்.
நண்பன் அந்த பூவை கொய்தால்..
ஓ நெஞ்சே!
நெஞ்சே! நீயென் செய்வாய்?

மழை நீரில் வானம் நனையாதம்மா..
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா..
எனைக் கேட்டு காதல் வரவில்லையே!!
நான் சொல்லி காதல் விடவில்லையே!!

மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா.
இறந்தாலும் காதல் இறக்காதம்மா.

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா?
எனதல்ல அதுவும் உனதல்லவா?
எதை கேட்ட போதும் தரக்கூடுமே!!
உயிர் கூட உனக்காய் விட கூடுமே!!

தருகின்ற பொருளாய் காதல் இல்லை.
தந்தாலே காதல் காதல் இல்லை.

Advertisements