தாளம்

கண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என் வீட்டுவாசலில்
வந்து தான் முடியும்
காதலியே !

கலைமானே உன் தலை கோதவா?
இறகாலே உன் உடல் நீவவா?
உன் கையிலே பூவலை போடவா?
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா? -காதலியே !

தொலைவானபோது பக்கமானவள்
பக்கம்வந்தபோது தொலைவாவதோ?

மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ?
சிருங்கார பூவுக்கு சேவை செய்யவா?

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே

நீயென்னை பிரிந்ததாய் யார் சொன்னது?
என் உயிருள்ள புள்ளி தான் நீ வாழ்வது.

Advertisements