களவு

நிலம் கொண்ட மன்னர்கள் யாரும் எண்ணிடாத வண்ணம் விளைச்சல் அமோகமாய் இருந்தது. தான் கொண்ட மகிழ்வு தன் குடும்பமும் பெற எண்ணி அன்னை வீடு சென்ற தாரத்திற்கு கடிதம் எழுதினான்.

தேவி!

நான் என்றுமே நினைத்திருக்கவில்லை உன்னை கைப்பிடித்த நேரன் என் பூமி செழித்தது. நீ நின்ற இடமெல்லாம் இன்று நெல்மனியாய்.. நீ வரும் நாள் காண என் கண் விழியோ காத்திருக்கிறது, செல்லுமுன் நீ கோபித்து கொண்டாய். ஏனோ! உன்னை அழைத்து வர மனம் எண்ணவில்லை அன்று. காரணம் என் வயலின் நிலையெண்ணி விளைச்சல் குறைந்து போனால் உனக்கு நான் எப்படி உணவு பொருட்களை வாங்கி தருவேன்! என்று எண்ணி. நீ அங்கு இருந்தாலேனும் மனம் நிம்மதி பெரும், நீயாவது முழுதாய் உண்பாய் என எண்ணியே நான் செய்தேன் அங்ஙனம். மன்னவன் எண்ணம் உனக்கு புரியாமல் போய் விடாதென நம்பினேன். இன்று என் உயிர் மீண்டது இனி நாம் ஒன்றாய் சேர்ந்து புது வாழ்வு தொடருவோம் தேவி.

-உன் மன்னவன்.

கடிதம் கண்டு பூரித்தாள்.

மன்னவா,

வாழி நின் எண்ணம். நின் எண்ணம் போல் நானும் காத்துகிடப்பேன் என்று எப்படி நினைத்தீர். தங்கள் உள்ள நிலையறிய நான் ஒன்றும் ஔவையல்லவே! நான் அப்படி என்ன தவறு செய்தேன் என் மன்னவன் என்னை போகாதே! என தடுக்கவுமில்லை, சென்ற பின் பின்தொடர்ந்து வந்துஅழைக்கவுமில்லை. பாவியானேனோ! என நான் வறுந்தாத நாட்களில்லை தேவா! வாடிய என் மனம் ஆரவில்லை. சூடிய பூவை நான் நின் தோளன்றி வேரெங்கும் மலரேன். உன் கழுத்தில் மாலையான நான் மீண்டும் உயிர் பெற்ற செடி ஏரி வாழ்ந்திருப்பேன் என எண்ணம் கொண்டீரோ! மாலை கொண்ட தோளோடு வாடியிருந்தாலும் நான் உயிர் கொண்டிருந்திருப்பேனே! இனி என் நிலை என்றுமே மீளாத உயர் நிலை. அந்நிலை போயினும் என் மனம் என்றும் ரனமே கொண்டு வாடும்.

-நீ சூடிய பூவை.

உள்ளம் குமுறினான் மன்னவன். என்னவள் சென்ற இடம் செல்லவேன் என ஓடினான். பாழும் கிணற்றின் மேலேரினான்.

எதிரில் மூச்சிறைக்க ஓடோடி வந்து கொண்டிருந்தால் தேவி.. மன்னவா! உன்னோடு வாழவே ஓடோடி வந்தேன். கண்ணத்தில் வழிந்தோடிய கண்ணீர் நிற்கவில்லை, இதழோரம் புன்னகை நிலைபெற்றது. நீ சொல்லும் சொல் நின் கடிதம் சொல்லவில்லையே தேவி! காலம் சதி செய்தது தேவா! நான் முன்னம் எழுதிய கடிதம் உமக்கு பின்னம் கிடைத்திருக்கிறது. நின் கடிதம் கண்டு நான் உடனே புறப்பட்டேனே உம் மனம் படும் பாட்டை எண்ணியே!

அடி கள்ளி நீ என் உள்ளத்தை களவாடினாய். சற்று தாமதித்திருந்தால் என் உயிரையும் களவு கொண்டிருப்பாய். இருந்தாலும் என்ன உனக்கே உரித்தானது என் உயிரும் நீ வாழும் உள்ளமும்.

Advertisements