தேடல் பொருள்

14உலகபறவையாகி பறக்கிறேன்
உலகமறிய தேடுகிறேன்
உள்ளம் தன்னை மறக்கிறேன்
உவகையோடு தேடுகிறேன்.

தேடி தேடி திரிகிறேன்
தேடல் தீரவில்லை
தேடும் பொருள்
யாதென தெளியவில்லை
இஃதென சொல்லுமளவு
யாரும் அறியவில்லை

பிறை போல தேடல்
வளர்கிறது
இரவு நிழல் போல்
தொலைகிறேன்

மனம் –
மயிலிறகாகி காற்றில் கலக்கிறது
மலரிதழாகி மண்ணில் புதைகிறது
மழைத்துளியாகி கடலில் தொலைகிறது

பிரபஞ்ச தேவதை பாடல் இசைகிறாள்
“நிதம் தேடும் மனமே தேடல் பொருள்”

Advertisements