வ‌ழ‌க்கொழிந்த‌ த‌மிழ் சொற்க‌ள்

இதயப்பூக்கள் தோழி கண்டெடுத்து தொகுக்க சொன்ன சொற்கள் இதோ..

1. குழல் – கூந்தல்
2. பறைதல் – பேசுதல்
3. முகில் – மேகம்
4. தாரகை – நட்சத்திரம்
5. இயற்றல் – இசைத்தல்
6. திரவுகோல் – சாவி
7. சாளரம் – சன்னல்
8. கோன் – அரசன்
9. பாதுகை – காலணி
10. அரவம் – பாம்பு
11. ஆ – பசு
12. மதில் – பாதுகாவல் சுவர்
13. முகடு – மலை உச்சி
14. சிகை – தலைமுடி
15. ஆழி – கடல்
16. பரி – குதிரை
17. களவு – திருட்டு
18. புகர் – புள்ளி
19. பண் – பாடல்
20. வழுவுதல் – விலகுதல்
21. அம்புலி – நிலா
22. பொய்கை – குளமும் நந்தவனமும்
23. விட்டம் – கூரை சுவர்
24. விமானம் – கோவில் கருவறைக்கு மேலே உள்ள கோபுர வடிவிலான அமைப்பு
25. தளி – கோவில்
26. திலகம் – பொட்டு
27. ஊடல் – காதலினால் உண்டாகும் காரணமற்ற சண்டைகள்
28. மதுரம் – இனிமை
29. மது – தேன்
30. திரவம் – நீர்தன்மை கொண்டவை.

என் சிந்தையை சுறுசுறுப்பாக்கி தேடவும் சிந்திக்கவும் வைத்த சகிக்கு மயில்தோகை நட்பு என்னிடமிருந்து.

Advertisements