கால்கள்

42-15137063
நீ இருக்கும் திசை என் கால்கள் அறியவில்லை
அறிந்தால்,
வாழும் நாள் வரை உன் திசை நோக்கி நடக்கும்.
நீ சொல்லும் சொற்களை இந்த செவி கேட்கவில்லை
கேட்டால்,
உன் வார்த்தை கேட்க ஓராயிரம் முறை தொலைபேசும்.
நீ பார்க்கும் பார்வை இந்த கண்கள் பார்க்கவில்லை
பார்த்தால்,
உன் பார்வை சந்திக்கவே ஓர் நாள் முழுதும் தவமிருக்கும்.