என் காதல் இசை

தேடி தேடி களைத்த பின்னும்
காதல் விடவில்லை
நாடி நாடி பருகிய பின்னும்
ஆசை விடவில்லை
ஓடி ஓடி ஒளிந்தாலும்
அகப்பட்டு கொள்கிறாய்
நான் வாடி விடாமல்
என்னை உயிர் பெற செய்கிறாய்

என் நிழலாய் பின்தொடர்கிறாய்
என்னுலகம் மறக்க செய்கிறாய்
என்னுள்ளே தொலைய செய்கிறாய்
எனை மறந்து சிரிக்க செய்கிறாய்
எப்போதும் நினைவில் நிற்கிறாய்
என் காதல் நீயன்றி வேரில்லை.