வானுலகு

வண்ணவில் ஓடம்
அதில்
சின்ன கொடியும்
மின்னல் துடுப்பும்

மேக காடு
அதில்
ஒவ்வொரு மரமும்
ஒவ்வொரு உரு.

மழை கனிகள்
ஈயும் போது
மேள தாளம்
கும்மாளம்.

நட்சத்திர மீன்கள்
பிடித்து
சூரிய குளத்தில்
சேமித்தாள்.

பாதி இரவுகள்
நட்சத்திரங்கள் தொலைந்தன
மீதி இரவுகள்
நட்சத்திரங்கள் மீண்டன.

களவு செய்தது
நிலா கள்ளன்
திருந்த செய்தது
வானவள் உள்ளம்.

Advertisements