உயிரெல்லாம் அழகானதே!

Blossom at last....
கண்களுக்குள் குளிர் சாரல்
நெஞ்சுக்குள் மண் வாசம்
கைகளுக்குள் உன் துளிகள்
மனசெல்லாம் வெண்தூரல்

ஆகாயம் காணும் போது
விரியும் கண்கள் போல்
ஆனந்தம் மெல்ல பரவி
உடனே லேசாகும் மனது

உள்ளம் கொள்ளை போகுதே!
ஒவ்வொரு முறையும் உன் வரவால்..
மழை சத்தம் கேட்கும் போது
உயிரெல்லாம் அழகானதே!

Advertisements