குமிழ்

பரவி பின் கூடுகிறாய்
கூடி பின் பரவுகிறாய்

சில சமயம்..

விலகி பின் சேர்கிறாய்
சேர்ந்து பின் பிரிகிறாய்

விண்வெளியின் தத்துவங்களை
ஒரு நொடியில்
மீண்டும் ஒளிபரப்புகிறாய்

மேகத்துக்கும்
மண்ணுக்கும்
பாலம் கட்டி
பின்
கோலம் போடும்
மழையின் குமிழ்.

Advertisements