நித்தம் ஒரு முத்தம்

IMG_4855
நினைக்கும் போது அருகில் இருக்கிறாய்
விரல் நீட்டி துழாவும் போது
காற்றில் கரைந்து தொலைந்து போகிறாய்

கனவில் கடலின் கரையில் காலாற நடைந்தோம்
கண் விழித்து பார்க்கிறேன்
காது தூரம் தேடினாலும் உன் கால்தடமில்லை

அழகாய் ஒரு சிறு கவழம் சோறு நீ நீட்டுகிறாய்
ஆசையாய் வாய் திறக்கிறேன்
அதிகாலை பனி போல காணாமல் போனாய்

கிளம்பும் முன் குட்டி முத்தம் தருவாய்
கிட்ட வந்து கன்னம் காட்டினேன்
கிடைக்காமல் போனது உன் அன்பு முத்தம்

இப்படியாய் நீ எழுதிய கடிதம் கண்டு என்
உலகமே உரைந்து போனதே
ஊர் சென்ற காதலா!
உடன் வந்து விடு
உனக்காக காத்திருக்கிறேன்
உள்ளம் கொள்ளும் வரை..
உயிர் தாங்கும் வரை..
உண்மை காதல் சேர்த்து வைத்திருக்கிறேன்.

Advertisements