நம்மை

A New Mother's Love

கருமை உனது விழிகள்
செம்மை உனது இதழ்கள்
நம்மை சேர்த்ததோர் இரவு

கண்மை கசிந்து ஒழுகும்
வெறுமை தொழைந்த ஆனந்தம்

எம்மை செய்த புண்ணியமோ
இம்மை நீ என் சொந்தம்
இனி் உன்னை பிரியோம்

சிறுமை உனக்கு இனியில்லை
பெருமை கொண்டு நீவாழி

என் கண்ணே!