வானம் எட்டும்

The road to Waternish Under a dramatic sky, su...
 (Photo credit: Wikipedia)

காண காண தூரம் செல்லுதே

கண்கள் கூட கவலை கொள்ளுதே
தினம் தினம் அருகில் செல்லவே
திகட்டாத வேகம் வருகுதே
சில நாள் முயற்சி போதாதே
சீக்கிரம் எட்டும் எட்டாத வானமும்.

Advertisements

சுவை

365:116 - paper flower
தேட தேட வார்த்தை கிடைப்பதில்லை சில நேரம்
திடீரென்று முளைக்கும் கவிதை சில நேரம்
கற்பனைக்கும் தேவை நல்ல நேரம் போலும்..

கவிதை

பேருந்தின் கண்ணாடி வழியே வழியும் போதே
என் நெஞ்சினுள் கவிதையாக உடுருவினாய்
மழை கவிதையே!

பதுமை

கனவுகள்
எல்லாம்
நினைவில்
இருப்பதில்லை
கவிதைகள்
எல்லாம்
எழுதப்
படுவதில்லை
எழுதப்படாத
கவிதைகள்
பேசும்
பதுமை…

சுவாசம்

சுவாசமாய் நிறைந்து கிடக்கிறாய்

தேடி கொண்டே இருக்கிறேன்

இருந்தும்…

மனதுக்குள் இசையாய் உலவுகிறாய்

வரிகள் மட்டும் மனப்பாடம்

இல்லை…

காதலாய்  பொழிகிறாய் என்னுள்

மழையின் ஈரம் காயாமல்

காப்பாய்…

நீயே…..

பூக்கும் புன்னகை

Alison
ஏதும் தோன்றாமல்
எதையோ யோசித்து
எது செய்வதென்று
அறியாமல் நான்.
காற்று வழி வந்த
குறுஞ்செய்தியாய்
என்னில் புன்னகை
பூக்க வைத்தாய் நீ.

காடு !!!

Trees & Buildings @ Perth, Australia
சில மாதங்களில் வளர்த்த கான்க்ரீட் காட்டை
இழக்க நேர்ந்தால் அழும் மனிதன் தான்
துளி தயக்கம் இன்றி

பல ஆயிரம் ஆண்டு ஆயுள் கொண்ட காட்டை
அழிக்க துணிகிறான் ! ?